அந்தரங்க வீடியோவை காட்டி இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் காதலன் கைது

தினகரன்  தினகரன்
அந்தரங்க வீடியோவை காட்டி இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் காதலன் கைது

புதுடெல்லி: அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக கூறி முன்னாள் காதலியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக  வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார்  தெரிவித்தனர். டெல்லியின் காலி ஆர்ய சமாஜ் பகுதியில் வசிக்கும் சுபம் சர்மா(23) என்பவர் மீது இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். தனது முன்னாள் காதலன் சர்மா, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தவறினால் தனது தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவமானப்படுத்துவேன் என்று மிரட்டுவதாகவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், சர்மாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சர்மாவும், புகார் தெரிவித்த பெண்ணும் காதலர்கள் என்பதும், பின்னர் இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதும் தெரியவந்தது. மேலும், பெண் உடனான உறவு முறிந்தபின்னர் சர்மா பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டு கடனாளியாக மாறியுள்ளார். இதனால் குறுக்குவழியில் யோசித்த சர்மா, தனது முன்னாள் காதலியான இளம் பெண்ணை மிரட்டி பணம் தர கேட்டுள்ளார். தராவிட்டால் சமூக வலைதளங்களில் அப்பெண்ணின் புகபை–்படம், வீடியோக்களை பகிர்ந்துவிடுவதாவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அப்பெண் முதலில் ₹15,000 கொடுத்தார். ஆனால், அதன்பின்னர் சிறிது நாள் கழித்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினார். இதனால் வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட அப்பெண் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தற்போது வாலிபரை கைது செய்துள்ளதாக போலீசார் கூறினர். மேலும், வாலிபரிடம் இருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய  மூன்று மொபைல் போன்கள், நான்கு சிம் கார்டுகள் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்கள் அடங்கிய ஒரு பென்ட்ரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை