அதிகரிக்கும் கொரோனா; இந்தியர்கள் நியூசிலாந்து வர தற்காலிக தடை

தினமலர்  தினமலர்
அதிகரிக்கும் கொரோனா; இந்தியர்கள் நியூசிலாந்து வர தற்காலிக தடை

வெலிங்கடன்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இங்கிருந்து நியூசிலாந்து நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 2.4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிவேகமாக பரவும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா 2வது அலையில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் இங்கிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து நாடு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா, செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், இந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அபாயத்தை தடுப்பது குறித்து ஆராயப்பட்டு பின்னர் பயணத் தடையை விலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை