ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்திற்கு தடை

தினமலர்  தினமலர்
ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்திற்கு தடை

படங்களை விமர்சிக்கிறேன் என படம் பற்றியும் அதில் நடித்தவர்கள், இயக்குனர்கள் பற்றியும் சகட்டுமேனிக்கு பேசி இணையதளங்களில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன். இவர் ஆன்டி இண்டியன் என்ற பெயரில் ஒரு படம் இயக்கி உள்ளார். ஏப்., 5ல் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருந்தால் அவற்றை மாற்றவோ, நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் இப்படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர். மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் இப்படத்தை எடுத்துள்ளனர். இதனால் அடுத்து மறுதணிக்கை குழுவிடம் முறையிட படக்குழு தீர்மானித்துள்ளது.

மூலக்கதை