மியூச்சுவல் பண்டு முதலீடு ‘தினமலர்' விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினமலர்  தினமலர்
மியூச்சுவல் பண்டு முதலீடு ‘தினமலர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:‘மியூச்சுவல் பண்டு’ முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை வாசகர்களிடம் ஏற்படுத்துவதற்காக, ‘தினமலர்’_ ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ இணைந்து, நடத்தும், இரண்டாவது வெபினார் நிகழ்ச்சி, நாளை நடைபெற இருக்கிறது.

முதல் நிகழ்ச்சி, கடந்த மார்ச் மாதம், 27ம் தேதி அன்று, நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த நிகழ்ச்சி, நாளை நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சி, காலை 11 மணி முதல், மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.இதில் கலந்துகொண்டு, ‘மியூச்சுவல் பண்டின் வகைகள்; அவற்றில் எவ்வாறு முதலீடு செய்வது?’ என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

கட்டணங்கள் எதுவுமின்றி, நடத்தப்படும் நிகழ்ச்சிகள் இவை. இந்த நிகழ்ச்சியில், ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் சார்பாக, அதன் தெற்கு மண்டல தலைவர் எஸ்.ஹரீஷ் , மற்றும் பிரபல நிதி ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, ‘மியூச்சுவல் பண்டு’ குறித்த அனைத்து விஷயங்களையும் வாசகர்களுக்கு விளக்க இருக்கின்றனர்.இந்நிகழ்ச்சியை, பத்திரிகையாளர் ஆர்.வெங்கடேஷ் நெறியாளராக இருந்து நடத்த இருக்கிறார்.அத்துடன், வாசகர்களின் சந்தேகங்களையும் நிகழ்ச்சியின்போது நிபுணர்கள் தீர்த்துவைக்க இருக்கின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாசகர்கள் மியூச்சுவல் பண்டு குறித்த தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.இதற்காக, வாசகர்கள் www.dinamalar.com/webinar எனும் இணையதளத்திற்கு சென்று தங்கள் சந்தேகங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

எது சிறந்தமுதலீடு?

முதலீடுகளிலேயே மிகச் சிறந்த முதலீடு என்பது நாம், நம்மீது செய்துகொள்வது தான்.எந்த ஒரு முயற்சிக்கும் முதலில் நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியமானது. அந்த வகையில், மியூச்சுவல் பண்டு முதலீடு குறித்து நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள உதவும் இந்த நிகழ்ச்சியை, நாளை வாசகர்கள் தவற விட்டுவிட வேண்டாம்.

மூலக்கதை