ஈரான் கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்

தினமலர்  தினமலர்

துபாய்:செங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. செங்கடலில் ஏமன் நாட்டுப்பகுதியில் ஈரானின் எம்.வி. சவிஸ் என்ற கப்பல் நிறுத்தப்பட்டிருந்து.

இந்த கப்பல் மூலமாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்குவதாக சவுதி அரேபியா உள்ளிட்ட மேற்காசிய நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இந்த கப்பல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பல் சேதமடைந்தது.இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப் படுகிறது.'இந்த தாக்குதலில் கப்பல் சேதமடைந்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை