கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., தரவரிசையில் | ஏப்ரல் 07, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., தரவரிசையில் | ஏப்ரல் 07, 2021

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி, முதலிடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 857 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா (825 புள்ளி) 3வது இடத்தில் தொடர்கிறார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 193 ரன் விளாசிய பாகிஸ்தானின் பகார் ஜமான் (752 புள்ளி), 19வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் அசத்திய (123*, 60 ரன்) தென் ஆப்ரிக்காவின் வான் டெர் துசென் (683 புள்ளி), முதன்முறையாக 22வது இடம் பிடித்தார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (690 புள்ளி) 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் அபாரமாக விளையாடிய (4, 3 விக்கெட்) தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே, 427 புள்ளிகளுடன் முதன்முறையாக 73வது இடத்தை கைப்பற்றினார்.

‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா (245 புள்ளி), 9வது இடத்தில் நீடிக்கிறார்.

மூலக்கதை