உலக கோப்பை... ‘பிளான் பி’ தயார் | ஏப்ரல் 07, 2021

தினமலர்  தினமலர்
உலக கோப்பை... ‘பிளான் பி’ தயார் | ஏப்ரல் 07, 2021

துபாய்: ‘‘உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரை நடத்த ‘பிளான் பி’ தயாராக உள்ளது,’’ என ஐ.சி.சி., தெரிவித்தது. 

இந்தியாவில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர்–நவம்பர் மாதங்களில் நடக்க உள்ளது. ஆனால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. 

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தற்காலிக தலைமை அதிகாரி ஜெப் அலார்டிஸ் கூறுகையில்,‘‘ கொரோனா பரவல் இருந்தாலும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதற்காக ‘பிளான் பி’ தயாராக உள்ளது. ஆனால் அந்த திட்டங்களை இன்னும் செயல்படுத்தவில்லை. இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டுடன் இணைந்து ஆலோசித்து வருகிறோம். சரியான நேரம் வரும் போது, மாற்று திட்டங்களை செயல்படுத்துவோம்,’’ என்றார்.

மூலக்கதை