கோஹ்லியை துாக்கிய அனுஷ்கா | ஏப்ரல் 07, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லியை துாக்கிய அனுஷ்கா | ஏப்ரல் 07, 2021

 சென்னை: இந்திய அணி கேப்டன் கோஹ்லியை துாக்கி அசத்தினார் மனைவி அனுஷ்கா சர்மா.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இந்த தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா. 

இதனிடையே கேப்டன் கோஹ்லியுடன் இணைந்து விளம்பர ‘ஷூட்டிங்கில்’ பங்கேற்றுள்ளார். அப்போது தன்னை விட 14 கிலோ எடை அதிகம் கொண்ட கோஹ்லியை (69 கிலோ) துாக்கினார் அனுஷ்கா (55 கிலோ). இதைப் பார்த்து வியந்த கோஹ்லி, மீண்டும் துாக்க முடியுமா என கேட்டார். சற்றும் தயங்காத அனுஷ்கா,  மறுபடியும் கோஹ்லியை துாக்கினார்.

இந்த வீடியோவை தனது ‘இன்டாகிராம்’ சமூக வலைதளத்தில் பதிவிட்ட அனுஷ்கா,‘ எப்படி துாக்கினேன் பார்த்தீர்களா, அவ்வளவு வலிமை உள்ளது,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை