ஓட்டுப்போட்டதை விளம்பரப்படுத்தவில்லை : என் கடமையை செய்துவிட்டேன் - சமுத்திரகனி

தினமலர்  தினமலர்
ஓட்டுப்போட்டதை விளம்பரப்படுத்தவில்லை : என் கடமையை செய்துவிட்டேன்  சமுத்திரகனி

தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திரையுலகினர் பலரும் ஆர்வமாய் ஓட்டளித்தனர். அதேசமயம் பல திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி ஓட்டளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.

ஆனால் அவர் ஓட்டு போட்ட விரல் மை அடையாளத்தை டுவிட்டரில் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, ‛‛நானும், என் மனைவியும் ஓட்டுச்சாவடிக்கு நடந்தே சென்று 6.55 மணிக்கே சென்றுவிட்டோர். ஆனால் ஓட்டு பதிவு இயந்திரத்தில் சிறு பிரச்னை அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பின்பு முதல் ஆளாக ஓட்டு போட்டு வந்தோம். வழக்கம் போல் நான் என் பணிக்கு சென்றுவிட்டேன். நான் ஓட்டு போட்டதை விளம்பரபடுத்தவில்லை. நான் ஓட்டு போட்டுவிட்டேன். என் கடமையை நான் சரியாக செய்துவிட்டேன்'' என வீடியோ மூலமும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை