கர்ணன் வெளியாகும் நாளில் நயன்தாரா படமும் ரிலீஸ்

தினமலர்  தினமலர்
கர்ணன் வெளியாகும் நாளில் நயன்தாரா படமும் ரிலீஸ்

தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வாஜ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, மலையாள நடிகர் லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் ஏப்-9ஆம் தேதி வெளியாகிறது. மலையாளத்திலும் இதே தேதியில் வெளியாகும் இந்தப்படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தநிலையில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள நிழல் திரைப்படமும் இதே தேதியில் ரிலீஸாவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், மீண்டும் ஒரு லாக்டவுன் போடப்படுவதற்கு முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று தான் இப்படி ரிலீஸ் தேதியை திடீர் அறிவிப்பாக வெளியிட்டுள்ளனராம்

குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக, மாஜிஸ்திரேட்டாக நடித்துள்ள இந்தப்படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் ஏழு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் நயன்தாரா. கர்ணன் வெளியாகும் அதே தேதியில் கேரளாவில் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் சரியான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை