உடலமைப்பை பற்றி விமர்சனம் - அபிராமி பதிலடி

தினமலர்  தினமலர்
உடலமைப்பை பற்றி விமர்சனம்  அபிராமி பதிலடி

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அபிராமி, தற்போது சில படங்களில் நடிப்பதோடு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இவரது உடல் அமைப்பை கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் சிலர் கருத்து பதிவிட்டனர்.

இதற்கு, ‛‛என் மார்பு பெரிதாக இருப்பதை பற்றி பலர் கருத்து சொல்கின்றனர். ஆமாம் எனக்கு பெரியது தான். காரணம் நான் ஒரு தென்னிந்திய பெண். எங்களுக்கும், இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்க முடியாது. என்னைப்பற்றி கருத்து சொல்லும் முன் உங்கள் தாயை பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதையாக நடத்த கற்றுக் கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி.

மூலக்கதை