வின்சியஸ் பிரேஸ் 2 கோல் அடித்து அபாரம்: லிவர்பூலை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

தினகரன்  தினகரன்
வின்சியஸ் பிரேஸ் 2 கோல் அடித்து அபாரம்: லிவர்பூலை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

மாட்ரிட்: அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து, ரியல் மாட்ரிட் அணிக்கு, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதிப் போட்டியில் வின்சியஸ் பிரேஸ் வெற்றி தேடித் தந்தார். இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற ரியல் மாட்ரிட், தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்தது. இதில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற ரியல் மாட்ரிட் அணியை எதிர்த்து, லிவர்பூல் அணி களமிறங்கியது. போட்டி துவங்கியது முதல், ரியல் மாட்ரிட் வீரர்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. 70 சதவீத நேரம் பந்து, அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ரியல் மாட்ரிட்டின் முன்கள வீரர்கள், பந்தை இங்கும், அங்கும் கடத்தி போக்கு காட்டிக் கொண்டே இருந்தனர். ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் சக வீரர் கொடுத்த பந்தை அற்புதமாக கடத்தி சென்று, வின்சியஸ் பிரேஸ் கோலாக மாற்றினார். 36வது நிமிடத்தில் அந்த அணியின் மார்கோ அசன்சியோ, அட்டகாசமாக ஒரு ஃபீல்ட் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையில் ரியல் மாட்ரிட் அணி இருந்தது. 2வது பாதியில் லிவர் பூல் அணியின் முன்கள வீரர் முகமது சலாஹ், ரியல் மாட்ரிட் அணியின் தடுப்புகளை சமாளித்து, மின்னலாக சென்று, கோல் அடித்தார். இதனால் மேலும் ஆக்ரோஷமாக ரியல் மாட்ரிட் வீரர்கள், பதில் தாக்குதலில் இறங்கினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. 65வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, வின்சியஸ் பிரேஸ் மீண்டும் ஒரு கோல் அடிக்க. 3-1 என்ற கணக்கில் இப்போட்டியில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.

மூலக்கதை