‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி: வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மாதாந்திர நாணயக் கொள்கை மறுஆய்வுக் கூட்டம்  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்தது.

ெதாடர்ந்து சக்திகாந்த தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘வங்கிகளுக்கான ‘ரெப்போ’ விகிதத்தில் மாற்றமில்லை. ஏற்கனவே உள்ள வட்டிவிகிதம் 4 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3. 35 சதவீதமும் அதே நிலையில் நீடிக்கும்.



2021-22ம் நிதி ஆண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 10. 5 சதவீதமாக இருக்கும். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும்நிலையில், சில மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

இதனால், உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்படலாம். தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வலுப்பெற்று வருகிறது.

உலகளாவிய வளர்ச்சியும் படிப்படியாக மீண்டு வருகிறது’ என்றார்.


.

மூலக்கதை