ஷிகா பாண்டே ‘நம்பர்–10’: ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம் | ஏப்ரல் 06, 2021

தினமலர்  தினமலர்
ஷிகா பாண்டே ‘நம்பர்–10’: ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம் | ஏப்ரல் 06, 2021

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி ‘பவுலிங்’ தரவரிசையில் இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே, 10வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டுள்ளது. இதில் ‘பவுலிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி (681 புள்ளி), பூணம் யாதவ் (641) முறையே 5, 8வது இடத்தில் நீடிக்கின்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே (10வது இடம்), 610 புள்ளிகளுடன் மீண்டும் ‘டாப்–10’ பட்டியலில் இடம் பிடித்தார். ஏற்கனவே இவர், பிப்ரவரி 2019ல் வெளியான தரவரிசையில் 5வது இடம் பிடித்திருந்தார். இந்தியாவின் தீப்தி சர்மா (604 புள்ளி), 12வது இடத்துக்கு முன்னேறினார்.

‘பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (710 புள்ளி), கேப்டன் மிதாலி ராஜ் (709) முறையே 7, 8வது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் (636), 15வது இடத்தில் தொடர்கிறார்.

‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியா சார்பில் தீப்தி சர்மா (5வது இடம், 343 புள்ளி) மட்டுமே ‘டாப்–10’ பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஷிகா பாண்டே (204 புள்ளி), ஜுலன் கோஸ்வாமி (200) முறையே 12, 13வது இடங்களில் நீடிக்கின்றனர்.

மூலக்கதை