புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்: ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணிக்கு | ஏப்ரல் 06, 2021

தினமலர்  தினமலர்
புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்: ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணிக்கு | ஏப்ரல் 06, 2021

மும்பை: ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்., தொடருக்கான ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருந்தார். கடந்த சீசனில் இவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி, கடைசி இடம் பிடித்தது. இதனால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  புதிய கேப்டனை நியமிக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்தது. ஆறு ஆண்டுகளாக (2013–15, 2018–20) ராஜஸ்தானுக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 26, புதிய கேப்டனாக நியமித்துள்ளது. கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா (2012), டில்லி (2016–17) அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

தோனி வாழ்த்து

சஞ்சு சாம்சன் கூறுகையில், ‘‘ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. இதற்காக கோஹ்லி, ரோகித், தோனி ஆகியோரிடம் இருந்து வாழ்த்து செய்தி கிடைத்தது. தலைமை பயிற்சியாளர் சங்ககராவுடன் இணைந்து பணியாற்ற இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது அனுபவம், அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன்,’’ என்றார்.

ராஜஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை வரும் ஏப். 12ல் மும்பையில் சந்திக்கிறது.

மூலக்கதை