பயிற்சியில் ‘வாத்தி கம்மிங்’ * அஷ்வின் அசத்தல் | ஏப்ரல் 06, 2021

தினமலர்  தினமலர்
பயிற்சியில் ‘வாத்தி கம்மிங்’ * அஷ்வின் அசத்தல் | ஏப்ரல் 06, 2021

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ‘நம்பர்–1’ டெஸ்ட் பவுலர், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 34. சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டியில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐ.பி.எல்., தொடரில் 154 போட்டிகளில் 138 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். கடந்த சீசன் முதல் டில்லி அணிக்காக (15 போட்டி, 13 விக்.,) விளையாடிய இவர், பைனலுக்கு முன்னேற கைகொடுத்தார்.

வரும் தொடரில் 12 விக்கெட் வீழ்த்தினால், 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்ட காத்திருக்கிறார்.  பின்வரிசை பேட்டிங்கிலும் ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவுவார். 14வது சீசன் ஐ.பி.எல்., தொடருக்காக தற்போது மும்பை சென்றுள்ளார்.

இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘ஜிம்மில்’ எடை துாக்குவதற்கு தயாராகும் போது, பின்னணியில் ‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்...’ பாடல் ஒலிக்கிறது. இதற்கேற்ப தனது வலது தோள்களை அசைத்து நடனமாடி மகிழ்ந்தார் அஷ்வின். இதுகுறித்து டில்லி அணி வெளியிட்ட ‘இன்ஸ்டாகிராம்’ வீடியோவில்,‘ஜிம் பயிற்சியில் எப்படி ஜாலியாக இருக்க வேண்டும் என ‘மாஸ்டர்’ அஷ்வினுக்கு தெரிந்துள்ளது,’ என தெரிவித்துள்ளது.

மூலக்கதை