மோரேவுக்கு ‘கொரோனா’ | ஏப்ரல் 06, 2021

தினமலர்  தினமலர்
மோரேவுக்கு ‘கொரோனா’ | ஏப்ரல் 06, 2021

சென்னை: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே, 58. ஐ.பி.எல்., தொடரில் 5 முறை கோப்பை வென்ற மும்பை அணியின் விக்கெட் கீப்பர் ஆலோசகராக உள்ளார். இவருக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மும்பை அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எவ்வித அறிகுறியும் இல்லாமல் கிரண் மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. பி.சி.சி.ஐ.,யின் சுகாதார வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எங்கள் மருத்துவ குழு இவரை கண்காணித்து வருகிறது. மும்பை ரசிகர்கள் இக்கடினமான காலகட்டத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்,’’ என, தெரிவித்திருந்தது.

சமீபத்தில் நிதிஷ் ராணா (கோல்கட்டா), அக்சர் படேல் (டில்லி), தேவ்தத் படிக்கல் (பெங்களூரு) என, மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

மூலக்கதை