தேறினார் தேவ்தத் படிக்கல் | ஏப்ரல் 06, 2021

தினமலர்  தினமலர்
தேறினார் தேவ்தத் படிக்கல் | ஏப்ரல் 06, 2021

சென்னை: கொரோனாவில் இருந்து தேறினார் பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல்.

ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 20. கர்நாடகாவை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் அதிக ரன்கள் (473 ரன், 15 போட்டி) எடுத்த பெங்களூரு வீரர் ஆனார். சமீபத்தில் சையது முஷ்தாக் அலி டிராபி (218 ரன்), விஜய் ஹசாரே டிராபி (5 சதம் உட்பட 737 ரன்) தொடரில் ரன்மழை பொழிந்தார்.

14வது ஐ.பி.எல்., தொடருக்காக சென்னை வந்த போது, நடத்தப்பட்ட சோதனையில் (மார்ச் 22), ‘கொரோனா’ இருப்பது தெரிந்தது. உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது நடந்த இரண்டாவது கட்ட சோதனையில் தேவ்தத் படிக்கல் தேறினார்.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் போர்டு கோரோனா பாதுகாப்பு விதிகள் பரிந்துரைப் படி, ‘10 நாள் தனிமைப்படுத்தப்படும் வீரர், கடைசி 2 நாள் நடக்கும் சோதனையில் தேற வேண்டும். தவிர அடுத்த 24 மணி நேரம் எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், மீண்டும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணையலாம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, தேவ்தத் படிக்கல் அடுத்து நடக்கும் இருதய பரிசோதனையில் தேற வேண்டும். இதன் பின் வீரர்களுடன் இணையலாம். இதனால் ஏப். 9ல் நடக்கும் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

மூலக்கதை