பொது காப்பீட்டுக்கு வடிவமைப்பு மற்றும் விலை நிர்ணயம்

தினமலர்  தினமலர்
பொது காப்பீட்டுக்கு வடிவமைப்பு மற்றும் விலை நிர்ணயம்

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ., பொது காப்பீடுகளுக்கான வடிவமைப்பு மற்றும் விலை நிர்ணயம் ஆகியவை குறித்த விதிமுறைகளுக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாலிசிதாரர்களின் நலனை காக்கும் வகையில் இந்த விதிமுறைகளை ஏற்படுத்தி இருப்பதாக, ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த வரைவு அறிக்கை குறித்த தங்களது அபிப்பிராயங்களை சம்பந்தப்பட்டவர்கள் வரும், 26ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொது காப்பீட்டு திட்டங்களை நிர்வகிப்பதில், ஒழுங்குமுறைகளை மேலும் மேம்படுத்துவது அவசியம் என கருதப்படுவதால், இந்த புதிய வரைவறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த விதிமுறைகளின்படி, சில்லரை மற்றும் வணிக திட்டங்களுக்கு இடையே தெளிவான வித்தியாசம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளுக்கு அனுமதி வழங்கப்படும்பட்சத்தில், இது அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பொருந்துவதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை