வளர்ச்சி மீதான நம்பிக்கையால் பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
வளர்ச்சி மீதான நம்பிக்கையால் பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரிப்பு

புதுடில்லி:கொரோனா பாதிப்புகளையும் மீறி, கடந்த நிதியாண்டில், பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த நிதியாண்டில், பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீடு, 2.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நம்பிக்கைஇது, இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் மீது, அன்னிய முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

கடந்த நிதியாண்டில், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டுமே முறையே, 6,884 கோடி ரூபாய் மற்றும் 7,783 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடு, சந்தையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதாரம், அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக விரைவாக மீட்சி காணத்துவங்கியதற்கு பின், அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது.

அன்னிய முதலீடுஅரசு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் பல்வேறு முக்கியமான கொள்கை முடிவுகளை எடுத்து, பொருளாதார மீட்சிக்கு உதவியது, அன்னிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக அமைந்தது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை