கொரோனா பாதிப்பில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களின் நிலைமை மோசம்: விதிகளை கடுமையாக்க மத்திய அரசு அறிவுரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பாதிப்பில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களின் நிலைமை மோசம்: விதிகளை கடுமையாக்க மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் மோசமாக உள்ள தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், சுகாதார செயலாளர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர், சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, அரியானா ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த அறிவுறுத்தப்பட்டது.


கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது காவல்துறை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் விதிகளை பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூறப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் தொற்று பரவல் ேவகமெடுத்து வருகிறது.



கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5. 5 சதவீதமாக இருந்த தொற்று பரவல் 2021 மார்ச்சில் 6. 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி இறப்பு விகிதம் 5. 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எனவே கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுதலை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் மூன்றாம்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

நேற்றிரவு வரை 7 கோடி பேர் தடுப்பூசி போட்ட நிலையில், அவர்களில் ஒரு கோடி பேர் மட்டுமே ஆன்லைனில் பதிவு ெசய்து தடுப்பூசி போட்டுள்ளனர்.

3. 75 கோடி மக்கள் நேரடியாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் 23 லட்சம் சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை