இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் நாங்கள் மட்டும் தோற்கவில்லை: அமெரிக்க பேராசிரியருடன் ராகுல் உரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் நாங்கள் மட்டும் தோற்கவில்லை: அமெரிக்க பேராசிரியருடன் ராகுல் உரை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இந்தியாவில் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். அமெரிக்க முன்னாள் அரசியல் விவகாரத்துறை செயலரும், ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல் பேராசிரியருமான நிக்கோலஸ் பர்ன்ஸ் உடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையில், ‘அசாமில் தேர்தல் பிரசாரம் செய்யும் எங்களது கனவான் (பிரதமர் மோடி), பாஜக வேட்பாளர்களின் கார்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வருகிறார்.

ஆனால், அவை தேசிய ஊடகங்களில் பேசப்படவில்லை.

இந்த நாட்டின் கட்டமைப்பை (நீதித்துறை, தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள்) மொத்தமாக பாஜக கைப்பற்றி உள்ளது. பாஜகவிடம் நிதி மற்றும் ஊடக ஆதிக்கம் அதிகமாக உள்ளது.


காங்கிரஸ் மட்டுமல்ல, பகுஜன் சமாஜ்வாதி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கட்சிகள் கூட இந்திய தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல்களை எதிர்த்துப் போராட வேண்டுமானால், நாட்டின் தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்புகள் சரியாக இருக்க வேண்டும்.



என்னைப் பாதுகாக்கும் நீதித்துறை அமைப்பு தேவை. எனக்கு நியாயமான சுதந்திரமான ஊடக சுதந்திரம் தேவை.

நிதி சமத்தன்மை தேவை.   கட்சியை இயக்குவதற்கான அனைத்து கட்டமைப்புகளின் பங்களிப்பும் எனக்குத் தேவை. ஆனால், அவை என்னிடம் இல்லை.

நியாயமான அரசியல் போராட்டத்திற்கு நிறுவனங்களின் ஆதரவும் இல்லை’ என்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாற்றினார்.

.

மூலக்கதை