100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்

தினமலர்  தினமலர்
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் - விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுார் ஊராட்சியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.வட்டார இயக்க மேலாளர் கிருஷ்ணகுமாரி, ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெயந்தி, குணசுந்தரி, ஒருங்கிணைப்பாளர்கள் அமராவதி, ரஞ்சிதா உட்பட பலர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில், தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு, ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வாங்கக் கூடாது. ஓட்டுபோடுவது ஜனநாயக கடமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, ஊராட்சி தோறும் மகளிர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மூலக்கதை