தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு 56 இடங்கள் தேர்வு

தினமலர்  தினமலர்
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு 56 இடங்கள் தேர்வு

விழுப்புரம் -விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்த 56 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏதுவாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரம் மாவட்டதில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 56 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்கள் பற்றிய விவரம் விழுப்புரம் மாவட்ட இணையதளமான https://viluppuram.nic.in என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி, இடங்களில் மட்டுமே கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அனுமதி அளிக்க போதிய கால அவகாசம் அளித்து விண்ணப்பிக்கவும்.இந்த 56 இடங்களில் தங்களுக்கு ஏதுவான இடத்தினை குறிப்பிட்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை முழுமையாக பின்பற்றி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை