பெண் குழந்தைகள் திருமணம்: இந்தியாவில் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
பெண் குழந்தைகள் திருமணம்: இந்தியாவில் அதிகரிப்பு

புதுடில்லி : 'உலக அளவில், பெண் குழந்தைகள் திருமணத்தில், 50 சதவீத பங்கு வகிக்கும் ஐந்து நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது' என, 'யுனிசெப்' தெரிவித்துள்ளது.


ஆய்வு : பெண் குழந்தைகள் திருமணம் குறித்து, யுனிசெப் எனப்படும், ஐ.நா.,வுக்கான சர்வதேச குழந்தைகள் நிதியம் ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது; அதன் விபரம்:உலகம் முழுதும் உள்ள பெண்களில், 65 கோடி பேருக்கு, குழந்தை திருமணம் நடந்துள்ளது; இதில், 50 சதவீத குழந்தை திருமணங்கள், வங்கதேசம், பிரேசில், எத்தியோப்பியா, இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளில் நடந்துள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில், 2.50 கோடி பெண் குழந்தை திருமணங்கள், உலகம் முழுதும் நடந்துள்ளன. குழந்தை திருமணம் செய்த மூன்று பேரில் ஒருவர், இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கிறார்.


வரும், 2030க்குள், நிலையான வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறுவதற்கு, குழந்தை திருமணங்கள் தடையாக உள்ளன.குழந்தை திருமணம்கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஓராண்டாக மூடிக் கிடக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு, பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குழந்தை திருமணங்களை ஒழிக்க, கடுமையான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.


பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார திட்டங்களை உறுதி செய்வதன் வாயிலாக, குழந்தை திருமணங்களை ஓரளவு குறைக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை