உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை கோரி வழக்கு

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை கோரி வழக்கு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடியாக நடத்தப்படும் என்பதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில்  தற்போது வரை காணொலி மூலமாக தான் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மார்ச் 15ம் தேதி முதல், வாரத்தில் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் பகுதிநேர வழக்கமான நேரடி விசாரணையும் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கண்டிப்பாக காணொலி காட்சி மூலமாக மட்டுமே அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் வழக்கறிஞர்கள் தரப்பில் நேற்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘நேரடி விசாரணை நடத்த உள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உச்ச நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக இருக்கும் எங்களிடம் எந்தவித ஆலோசனையோ அல்லது சுற்று அறிக்கையோ அனுப்பி கேட்கப்படவில்லை. அதனால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை