கினியா ராணுவ தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 600 பேர் காயம்

தினகரன்  தினகரன்
கினியா ராணுவ தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 600 பேர் காயம்

பேட்டா: கினியா நாட்டில் ராணுவ தளத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாயினர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கினியா நாட்டின் பேட்டா பகுதியில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் நேற்று டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்தது. இதனால், பயங்கர சத்தமும், வானுயரத்திற்கு எழுந்த கரும்புகையும் பல கிமீ தூரத்திற்கும் தெரிந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். சக்திவாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் பலியாகினர். 6700க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் கூறுகையில், ‘‘டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை’’ என தெரிவித்தார். இந்த சம்பவத்தால், பேட்டா பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி, பல வீடுகள் சேதமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை