கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?... இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

தினகரன்  தினகரன்
கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?... இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக ‘க்ளீடன்’ இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு தெரியாமல் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவதாக ‘க்ளீடன்’ என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெளியான ஆய்வறிக்கையில், ‘திருமணத்தை மீறிய உறவு (கள்ளக்காதல்) வைத்திருக்கும் பெண்களில் சுமார் 48 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்களில் தாய்மை அடைந்தவர்களும் உள்ளனர். நாங்கள் இந்தியாவில் நடத்திய ஆய்வில் 30 முதல் 60 வயதுடைய பெண்கள் பங்கேற்றனர். இவர்களில் 78 சதவீதம் பேர் நன்கு படித்தவர்கள், 74 சதவீதம் பேர் படிக்காதவர்கள். திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஆண் மீது பெண்களுக்கு ஏற்படும் மோகத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கணவர் மீதான அதிருப்தி, மனம் விரும்பாத ஒரு வாழ்க்கை துணை உள்ளிட்டவையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, தனக்கு ஏற்ற அழகு, தன்னுடயை துணையிடம் இல்லை என்ற எண்ணமும், தன்னுடனான பாலியல் உறவை திருப்தி படுத்தாததும் காரணமாக கூறப்படுகின்றன. இதுவே தங்களது கணவர்களை வெறுக்க பெண்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது. இதுபோன்று பல்வேறு காரணங்களை சொல்லி திருமணத்தை மீறிய உறவை இந்திய பெண்கள் நியாயப்படுத்துகின்றனர். கடந்தாண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி, இந்தியாவில் திருமணமானவர்களில் கிட்டத்தட்ட 56 சதவீதம் பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டனர். 25 மற்றும் 50 வயதிற்குட்பட்ட 1,525 திருமணமான இந்தியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 48 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் காதலித்துள்ளனர். பணிக்காக வெளியூர் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் திருமணமான பெண்கள், அவர்களும் பணியாற்றும் சிலர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் உறவு வைத்திருப்பதாக கூறினர். அதேபோல் டிக்டாக் போன்ற செயலி, சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் ஆண்களிடம் குடும்ப பெண்கள் சிலர் சிக்கியதாக கூறினர்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை