திரிணாமுல் - பாஜ சார்பில் ஒரே தொகுதியில் 2 மாஜி ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்: மேற்குவங்க தேர்தலில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
திரிணாமுல்  பாஜ சார்பில் ஒரே தொகுதியில் 2 மாஜி ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்: மேற்குவங்க தேர்தலில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தின் டெப்ரா தொகுதியில் திரிணாமுல் - பாஜக சார்பில் 2 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் களத்தில் மோதுகின்றனர். மேற்குவங்க மாநிலம் மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள டெப்ரா சட்டசபை தொகுதியில் இம்மாநிலத்தில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் நேருக்குநேர் மோதுகின்றனர். முன்னதாக ஐபிஎஸ் அதிகாரி ஹுமாயூன் கபீர், கடந்த மாதம் சந்தன்னகர் காவல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். அவர் தற்ேபாது டெப்ரா சட்டசபை தொகுதியின் வேட்பாளராக மம்தா அறிவித்துள்ளார். ஹுமாயூன் கபீரை மம்தா தனது கட்சியில் சேர்த்தற்கு காரணம், திரிணாமுல்லில் இருந்து பாஜகவுக்கு தாவிய சுபேண்டு அதிகாரி தலைமையில் நடந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க உத்தரவிட்டார். அப்போது, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரை கைது செய்தார். அதன் தொடர்ச்சியாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார். அதே நேரத்தில், ஹுமாயூன் கபீர் போட்டியிடும் ெடப்ரா தொகுதியில் மற்றொரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பாரதி கோஷை பாஜக களமிறக்கியுள்ளது. இவர் ஜார்கிராம் மாவட்ட காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, முதல்வர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். பொது விழாவின் போது மம்தா பானர்ஜியை ஒரு தாய் என்று போற்றினார். ஆனால், இவர் திடீெரன இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்தார். பின்னர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார். இந்நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளான ஹுமாயூன் கபீர் - பாரதி கோஷ் ஆகியோர் திரிணாமுல் - பாஜக வேட்பாளர்களாக டெப்ரா தொகுதியில் போட்டியிடுவதால், இருவரும் முழுநேர அரசியல்வாதிகளை போன்று தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல், முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்குரிய தலைவரான சுபேண்டு அதிகாரி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் மம்தாவும் போட்டியிடுவதால் பிரபலங்களின் தொகுதிகள் அரசியல் சூட்டை கிளப்பியுள்ளன.

மூலக்கதை