மத்திய அமலாக்கத்துறை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்

தினகரன்  தினகரன்
மத்திய அமலாக்கத்துறை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம்: தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அமலாக்கத்துறையினர் தேர்தல் விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய தேர்தல் தலைமை ஆணையருக்கு புகார் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரளாவிற்கு வருகை தந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள உட்கட்டமைப்பு நிறுவனமான கிபி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அனைத்து தகவல்களையும் அமலாக்கத்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மத்திய அமலாக்கத்துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை