இம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவக்கம்: ஜோ பைடன்

தினமலர்  தினமலர்
இம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவக்கம்: ஜோ பைடன்

வாஷிங்டன்: இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்தது. கொரோனாவால் ஏராளமான அமெரிக்கர்களும் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டுவந்தார். இதற்கான கொரோனா நிவாரண மசோதா நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த நிவாரண மசோதா குறித்து ஜோ பைடன் கூறுகையில், ‛இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன் பெறுவார்கள். திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை