2027-ல் உலகைச் சுற்றிப் பறக்கும் உணவு விடுதி; அமெரிக்க நிறுவனத்தின் முயற்சி

தினமலர்  தினமலர்
2027ல் உலகைச் சுற்றிப் பறக்கும் உணவு விடுதி; அமெரிக்க நிறுவனத்தின் முயற்சி

வாஷிங்டன்: 2026-ஆம் ஆண்டு விண்ணில் மிதக்கும் ஓர் உணவு விடுதியை உருவாக்க கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று திட்டமிட்டது. தி கெட்டவே பவுண்டேஷன் என்கிற இந்த நிறுவனம் வளிமண்டலத்திற்கு வெளியே உலகைச் சுற்றி வரும் ஓர் உணவு விடுதி அமைக்க கடந்து 2019ஆம் ஆண்டு திட்டமிட்டது.

அன்றுமுதல் இதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. இந்த உணவு விடுதி அமைக்க எட்டு வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டது. 2027-ஆம் ஆண்டு இந்த உணவு விடுதி அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. வாயக்கர் ஸ்டேஷன் என்று பெயரிடப்பட்ட இந்த உணவு விடுதி மின்தூக்கி வசதி கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
இந்த உணவு விடுதியை உருவாக்கிய நிறுவனத்தின் நிறுவனர் ஜான் பிளிங்கோ ஒரு முன்னாள் விமானி ஆவார். விமானியாக இருந்த போதே விண்வெளியில் பறக்கும் இந்த உணவு விடுதியை உலக நாடுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் உருவாக்கி சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார் ஜான்.

தற்போது அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் ஒன்றை அனுப்பி சோதனை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து வளிமண்டலத்திற்கு வெளியே இந்த உணவு விடுதியை அமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை