உலகின் சக்திவாய்ந்த கப்பல் படையாக உருவெடுத்துள்ள சீனா

தினமலர்  தினமலர்
உலகின் சக்திவாய்ந்த கப்பல் படையாக உருவெடுத்துள்ள சீனா

சீனா தற்போது தனது கப்பல் படையை வலுப்படுத்தி வருகிறது. உலகிலேயே அதிக கப்பல்களைக் கொண்ட சிறந்த கப்பல் படையாக விளங்கியது அமெரிக்க கப்பல் படை. இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருந்தது. வலுவான ராணுவம் கொண்ட சீனா, கப்பல் படையை வலுப்படுத்த 2016ஆம் ஆண்டுமுதலே ஜி ஜிங்பிங் அரசு திட்டமிட்டது.



இதனை அடுத்து புதிய கப்பல்கள் உருவாக்கப்பட்டன. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கப்பல்கள் போர் சமயத்தில் தொலைவிலிருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை கொண்டிருந்தது. தற்போது தென் சீனக் கடற்பரப்பில் பயிற்சி மேற்கொண்டு வரும் சீன கப்பல் படையினர், போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்கொரிய கப்பல் படையுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடும் சீன கப்பற்படை சமீபத்தில் தைவான் கப்பல் படையுடன் மோதலில் ஈடுபட்டது. ஆசிய கண்டத்தில் சீன கப்பல் படையுடன் வேறு எந்த நாட்டின் கப்பல் படையும் போட்டிபோட முடியாது என்னும் நிலை நிலவியது.

அண்டை நாடுகள் அச்சம்



2020-ஆம் ஆண்டுக்குள் 360 சீன போர்க்கப்பல்கள் உருவாகின என்று அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க கப்பற்படையிடம் 355 போர்க்கப்பல்கள் உள்ளன. தற்போது சீனாவின் போர்க் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கப்பல்படை என்ற பெயரை சீன கப்பல் படை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



கப்பல்களில் இருந்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமாக அண்டை நாடுகளுக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக தற்போது ஜப்பான், தென் கொரியா, தைவான் உள்ளிட்ட பல அண்டை நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

மூலக்கதை