தங்க கடத்தல் வழக்கு: சிவசங்கரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
தங்க கடத்தல் வழக்கு: சிவசங்கரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் முன்னாள் முதல்வரின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. சிவசங்கருக்கு வழங்கிய ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், சிவசங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ேமலும் இந்த வழக்கு 6 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த ேநரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. சிவசங்கர் தங்க கடத்தல் ெதாடர்பான சதியில் ஈடுபட்டதாகவும், சுங்க அதிகாரிகளை ஏமாற்ற முயன்றதாகவும் அமலாக்கத்துறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ வாதிட்டார்.

மூலக்கதை