‘யாரிடம் கேட்டு கேரள எல்லை மூடப்பட்டது?’.. கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தினகரன்  தினகரன்
‘யாரிடம் கேட்டு கேரள எல்லை மூடப்பட்டது?’.. கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம்: யாரிடம் கேட்டு கேரள எல்லை மூடப்பட்டது என கர்நாடக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா  பரவல் அதிகரித்தது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே கேரளா முதலிடத்துக்கு வந்தது. இதையடுத்து கேரளாவில் இருந்து செல்பவர்களுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கேரளாவில் இருந்து வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் பல பகுதிகளில் திடீரென கேரள எல்லைகளை கர்நாடக அரசு மூடியது. எல்லையில் உள்ள பல சாலைகள் மூடப்பட்டன. குறிப்பிட்ட ஒருசில சோதனைச்சாவடிகள் மூலமே கேரள பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நோயாளிகள் உட்பட பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். இதையடுத்து கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சுப்ைபயாரே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் கேரள எல்லையை மூட யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது என ேகள்வி எழுப்பியது.மேலும் இது தொடர்பாக மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீலிடம், கேரள எல்லையை மூட உத்தரவு பிறப்பித்தீர்களா? என நீதிபதி கேட்டார். அதற்கு மத்திய அரசு வக்கீல் ‘இல்ைல’ என பதிலளித்தார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், ‘எந்த மாநிலங்களுக்கு இடையேயும் எல்லைகளை மூடக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் யாரிடம் கேட்டு கேரள எல்ைலயை கர்நாடக அரசு மூடியது. இது மத்திய அரசுக்கு எதிரான ெசயலாகும்’ என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மூலக்கதை