ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர்; தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்: கமல் பரப்புரை

தினகரன்  தினகரன்
ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர்; தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்: கமல் பரப்புரை

சென்னை: தேர்தலுக்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், நான் கூறுகிறேன், நான் விற்பனைக்கு அல்ல, மக்கள் நீதிம மய்யமும் விற்பகைக்கு அல்ல என்றார். மேலும், மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர், தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர் என்றும் தெரிவித்தார். காங்கிரஸின் இருப்பை இல்லாமல் செய்து கொண்டிருப்பவர்கள்தான் பி டீம் என்றும் கூறினார்.

மூலக்கதை