ரிஷாப் பன்ட் சதம் * மீண்டது இந்திய அணி | மார்ச் 05, 2021

தினமலர்  தினமலர்
ரிஷாப் பன்ட் சதம் * மீண்டது இந்திய அணி | மார்ச் 05, 2021

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. பின் எழுச்சி கண்ட இந்திய அணி, அடுத்த இரு டெஸ்டில் வெற்றி பெற்று 2–1 என, முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. 

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 24 ரன் எடுத்து, 181 ரன்கள் பின்தங்கி இருந்தது. ரோகித் (8), புஜாரா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

பன்ட் சதம்

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித், புஜாரா இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாரா 17 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கோஹ்லி ஸ்டோக்ஸ் பந்தில் போக்சிடம் ‘பிடி’ கொடுத்து ‘டக்’ அவுட்டாகி, இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ரகானே 27 ரன்கள் எடுக்க, ரோகித் சர்மா 49 ரன்னுக்கு அவுட்டானார். 

அடுத்து ரிஷாப் பன்ட், வாஷிங்டன் சுந்தர் இணைந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப் பன்ட் (101), டெஸ்ட் அரங்கில் 3வது சதம் அடித்து அவுட்டானார். இவருக்கு கைகொடுத்த வாஷிங்டன் சுந்தர், தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து, 89 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

வாஷிங்டன் சுந்தர் (60), அக்சர் படேல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூலக்கதை