அமெரிக்க அமைப்புக்கு இந்தியா கண்டனம்

தினமலர்  தினமலர்
அமெரிக்க அமைப்புக்கு இந்தியா கண்டனம்

புதுடில்லி: 'ப்ரீடம் ஹவுஸ்' என்ற, என்.ஜி.ஓ., எனப்படும், தொண்டு நிறுவனம், அமெரிக்க அரசின் நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'சுதந்திரம் என்பதிலிருந்து பாதி சுதந்திரம் என்ற நிலைக்கு இந்தியா கீழிறங்கிவிட்டது. நாட்டில் மக்கள் உரிமைகள், சுதந்திரம் காணாமல் போகின்றன' என, கூறப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''இந்தியாவில் ஜனநாயக கொள்கைகள் வலிமையாக பின்பற்றப்படுகின்றன. தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை வலிமையாக்காதவர்களிடம், சான்றிதழ் பெற வேண்டிய அவசியம், இந்தியாவுக்கு இல்லை,'' என்றார்.

மூலக்கதை