உலக மக்களுக்கு 7 முறை தரலாம் 93.1 கோடி டன் உணவு வீணடிப்பு: ஐநா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

தினகரன்  தினகரன்
உலக மக்களுக்கு 7 முறை தரலாம் 93.1 கோடி டன் உணவு வீணடிப்பு: ஐநா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு தோராயமாக 93.1 கோடி டன் உணவு வீணடிக்கப்பட்டதாக உணவு கழிவு குறியீடு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஐநா. சூழல் திட்டம், கெனியாவின் தலைநகரான நைரோபியை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. ஐநா. சூழல் திட்டம், உணவு கழிவுகளை குறைக்க அரசுகளுடன் இணைந்து செயல்படும் வ்ராப் (WRAP) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட, உணவு கழிவு குறியீடு 2019 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உணவு கழிவுகள் பணக்கார, ஏழை நாடுகளில் பரவலாக ஒத்திருப்பது தெரிய வந்துள்ளது. 2019ம் ஆண்டில் 93.1 கோடி டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு உலகில் உள்ள மக்களுக்கு 7 முறை உணவு அளித்திருக்கலாம்.இதில், 61 சதவீதம் வீடுகள், 26 சதவீதம் ஓட்டல்கள், உணவு விடுதிகள், 13 சதவீதம் இதர சில்லறை வழிகளில் இருந்தும் வீணாக்கப்படுகிறது. உலகளவில் தயாரிக்கப்படும் உணவு உற்பத்தியில் 17 சதவீதம் வீணாகிறது.மேலும், சாப்பிட தயாராக இருக்கும் உணவுகளில் 11 சதவீதம் வீடுகள், 5 சதவீதம் ஓட்டல்கள், 2 சதவீதம் சில்லறை வழிகளிலும் வீணாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலக தனிநபர் வருவாயில் 121 கிலோ, வீட்டு தனிநபர் வருவாய் கணக்கில் 74 கிலோ உணவு வீணடிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் 6.8 கோடி டன்இந்தியாவை பொருத்தவரையில், ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு 50 கிலோ உணவு பொருட்களை வீண் செய்கின்றனர். இது, அமெரிக்காவில் 59 கிலோ, சீனாவில் 64 கிலோவாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 6 கோடியே 87 லட்சத்து 60 ஆயிரத்து 163 கிலோ உணவுகள் வீணடிக்கப்பட்டு உள்ளன.

மூலக்கதை