ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.50: கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை

தினகரன்  தினகரன்
ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.50: கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை

புதுடெல்லி: ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிரப்பதற்காக, பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை உட்பட சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவது புதிதல்ல. ஏற்கனவே விழாக் காலங்களில் அதிகரிக்கப்படுவது வழக்கம்தான். மகராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால், நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் மும்பை டிவிஷனுக்குட்பட்ட 78 ரயில் நிலையங்களில், அதிக பயணிகள் வந்து செல்லும் 7 நிலையங்களில் மட்டுமே கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தற்காலிக நடவடிக்கைதான்’ என்று கூறியுள்ளது. சமீபத்தில் அவசியமற்ற பயணங்களை மக்கள் குறைக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் கட்டண உயர்வுக்கு ரயில்வே விளக்கம் அளித்திருந்தது.

மூலக்கதை