பிஷன் சிங் பேடி நலம் | மார்ச் 05, 2021

தினமலர்  தினமலர்
பிஷன் சிங் பேடி நலம் | மார்ச் 05, 2021

புதுடில்லி: மூளை ‘ஆப்பரேஷன்’ செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி நலமுடன் இருக்கிறார்.

இந்திய ‘சுழல்’ ஜாம்பவான் பிஷன் சிங் பேடி 74. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பிறந்த இவர், 1967ல் கோல்கட்டாவில் நடந்த விண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடைசியாக 1979ல் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் விளையாடிய இவர், மொத்தம் 67 டெஸ்ட் (266 விக்கெட்), 10 ஒருநாள் போட்டிகளில் (7) பங்கேற்றார். தவிர இவர், 22 டெஸ்ட் போட்டிகளுக்கு (6 வெற்றி, 11 தோல்வி, 5 ‘டிரா’) கேப்டனாக செயல்பட்டார்.

கடந்த மாதம் இருதயத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிஷன் சிங் பேடி, டில்லியில் உள்ள மருத்துவமனையில் ‘பைபாஸ் ஆப்பரேஷன்’ செய்து கொண்டார். சமீபத்தில் இவரது மூளையில் இரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. தற்போது ஆப்பரேஷன் மூலம் இது அகற்றப்பட்டது. தற்போது நலமுடன் இருக்கும் இவர், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.,) இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் இவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மூலக்கதை