குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த அமெரிக்க பார்லியில் மசோதா தாக்கல்

தினமலர்  தினமலர்
குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்த அமெரிக்க பார்லியில் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: 'எச் - 1பி விசா'வை பயன்படுத்தி, குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியில் நியமிப்பதை தடுக்க, அமெரிக்க பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, 'எச் - 1பி' மற்றும் 'எச்4' விசாக்கள் வழங்கப்படுகின்றன.குறிப்பாக, எச் - 1பி விசா, வெளிநாடுகளில் இருந்து, வேலை தொடர்பாக அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விசாவை பயன்படுத்தி, இந்தியர்களும், சீனர்களும் தான், அமெரிக்காவில் அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.இந்த விசா வாயிலாக, வெளிநாட்டினரை, குறைந்த சம்பளத்தில் பணியில் நியமிப்பதாக, அமெரிக்க நிறுவனங்கள் மீது, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதையடுத்து, அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், குடியரசு கட்சி எம்.பி.,க்கள் ப்ரூக்ஸ், கேட்ஸ், லான்ஸ் கோடன் ஆகியோர், மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்;

அதில் கூறப்பட்டுள்ளதாவது:எச் - 1பி விசாவை பயன்படுத்தி, பல நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை, குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்துகின்றன. இதனால், அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகின்றனர்.அதனால், எச் - 1பி விசா மூலம் வெளிநாட்டினரை பணியில் அமர்த்தும், நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களுக்கு அமெரிக்கர்களை விட அதிக சம்பளம் வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை