மியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்

தினமலர்  தினமலர்
மியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை எதிர்த்து ஜனநாயக ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்குநாள் அங்கு போராட்டம் அதிகரித்து வருகிறது.


இதுவரை 54 போராட்டக்காரர்கள் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டது உலகையே அச்சுறுத்தியுள்ளது. இதற்கு பல நாட்டுத் தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 21-ம் நூற்றாண்டில் நடந்த முக்கியமான இராணுவ அத்துமீறல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐநா.,வின் மனித உரிமை பிரிவுத் தலைவர் மிஷல் பலசெட் மியான்மர் இராணுவத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஆயிரத்து 300 பேர் கைதாகியுள்ள நிலையில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு நாளுக்குநாள் பலரை பலிவாங்கி வருவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.


ராணுவம் அத்துமீறல்


ஆக்சன் சுகாய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் அத்துமீறல் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இரு நாட்டு ராணுவ தாக்குதல்களின்போது காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தாக்கக்கூடாது என்பது ஐநாவின் விதி.
ஆனால் இந்த விதியைமீறி மியான்மர் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவந்த மருத்துவ ஊழியர்களும் ராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு மிஷல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் மனித உரிமைமீறல் எங்கு நடந்தாலும் அதனை எதிர்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இதற்கு உலக நாடுகள் இணைந்து தீர்வை கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை