தங்கம் விலை சவரன் ரூ.34 ஆயிரத்திற்கு கீழ் சென்றது

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சவரன் ரூ.34 ஆயிரத்திற்கு கீழ் சென்றது

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இன்று சவரன் ரூ.34 ஆயிரத்திற்கு கீழ் விற்பனையாகிறது.

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4,217க்கும், சவரன் ரூ.376 குறைந்து ரூ.33,736க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.46,080க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2.40 காசுகள் குறைந்து ரூ.70.40க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை