தென்னிந்தியாவில் தனது தடத்தைப் விரிவுபடுத்தும் ஸ்கோடா ஆட்டோ

தினமலர்  தினமலர்
தென்னிந்தியாவில் தனது தடத்தைப் விரிவுபடுத்தும் ஸ்கோடா ஆட்டோ

இந்தியாவின் தெற்கு சந்தைகளில் தனது நிலையை வலுப்படுத்தவும், வலுவான காலடி அமைப்பதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதையும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

தென்னிந்தியாவில் தனது தடத்தை விரிவுபடுத்தும் முயற்சியை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் கேயுஎன் மோட்டார்ஸின் புதிய டீலர்ஷிப் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆட்டோவின் உலகளாவிய மறுவடிவமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக புதிய கார்பரேட் ஐடன்டிடி மற்றும் டிசைனை இந்த நவீன டீலர்ஷிப் வசதி எடுத்துரைக்கிறது.

ஸ்கோடா ஆட்டோ டீலர்ஷிப்களின் புதிய வெளிப்புறங்கள் பகல், இரவு என எந்நேரமும் பிராண்ட் ஆற்றலை எடுத்துரைப்பதாக இருக்கும்.புதிய வண்ணங்கள், தெளிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதில் புலப்படும் தன்மை ஆகியவை ஸ்கோடா ஆட்டோ ஷோரூம்களின் புதிய சிறப்பம்சங்கள் ஆகும்.

இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் ஜேக் ஹோலிஸ் கூறுகையில், "இந்தியா 2.0-வின் அறிமுகத்திற்கு எங்கள் தயார்நிலையை உறுதி செய்வதற்காக, ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் நாங்கள் நாடு முழுவதும் நெட்வொர்க் வரம்பை விரிவுபடுத்துவதில் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். கேயுஎன் மோட்டார்ஸ் உடன் இணைந்து புதுச்சேரியில் எங்கள் முதல் டீலர்ஷிப்பை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

கேயுஎன் மோட்டார்ஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் டீலர் பிரின்சிபல் அருண் உப்புசாமி கூறுகையில், “ஸ்கோடா ஆட்டோவின் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளுடன், வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். ” என்றார்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா தற்போது இந்தியாவில் ரேபிட் மற்றும் சூப்பர் ஆகிய இரண்டு மாடல்களைக் கொண்டுள்ளது. விரைவில் எம்பிகியு - ஏஓ இன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட நடுத்தர அளவிலான எஸ்யுவி குஷாக்-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது, இது இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் ஸ்கோடா எஸ்யுவி ஆகும்.

‘இந்தியா 2.0’ திட்டத்திற்கு ஏற்ப, கார்ப்பரேட் கட்டமைப்பு, உபயோகமுள்ள உட்புறங்கள் மற்றும் தீரமைக்கப்பட்ட வணிக செயல்முறைகள் ஆகிய டீலர்ஷிப்பின் புதிய வடிவமைப்புக் கருத்து ஸ்கோடா ஆட்டோவின் தத்துவமான “ சிம்ப்ளி கிளெவர் வித் ஹ்யூமன் டச் ”-ஐ பிரதிபலிக்கிறது.

மூலக்கதை