விஜய்யின் ‘தளபதி 65′ பட நாயகிக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம்..?

FILMI STREET  FILMI STREET
விஜய்யின் ‘தளபதி 65′ பட நாயகிக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம்..?

‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் நாயகி யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தற்போது பிரபாஸுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் பூஜா. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

‘முகமூடி’ படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிப்பதை விட்ட பூஜா தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்கின்றனர்.

இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 3.25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இது நயன்தாராவுக்கு இணையான சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்

Thalapathy 65 heroine to receive whopping amount of Rs. 3.5 crore

மூலக்கதை