மியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி

தினகரன்  தினகரன்
மியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி

யாங்கூன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். மியான்மரில் கடந்த மாதம் 1ம் தேதி ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், மோனிவாவில் நேற்று போராட்டம் நடத்திய மக்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமா தாக்குதல் நடத்தியது. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றது. அதன் பிறகு, போராட்டக்காரர்களை நோக்கி ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 6 பேர் பலியாகினர்.அதே போல், மைங்கியான் பகுதியில் நடந்த போராட்டத்தில், 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில் ஏற்கனவே 18 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக ஐநா நேற்று முன்தினம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை