இந்திய வம்சாவளிக்கு ஓராண்டு சிறை

தினமலர்  தினமலர்
இந்திய வம்சாவளிக்கு ஓராண்டு சிறை



லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், டாக்டர் பரிந்துரைப்படி தர வேண்டிய மருந்துகளை, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பல்கீத் சிங் கைரா, 36, என்பவருக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர், 'டையாசிபம், நைட்ரசிபம்' போன்ற வலி நிவாரண மருந்துகளை, டாக்டர் பரிந்துரையின்றி விற்பனை செய்துள்ளார்.

அதுபோல, எட்டு லட்சத்திற்கும் அதிகமான துாக்க மாத்திரைகளை, கள்ளச் சந்தையில் விற்றுள்ளார். இதன் மூலம், 60 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார். இது குறித்து, அரசு மருந்து கவுன்சில் நடத்திய விசாரணைக்கு, பல்கீத் சிங் கைரா ஒத்துழைக்கவில்லை. அதனால், அவர் கவுன்சில் உறுப்பினராக தொடர இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பல்கீத் சிங் கைராவுக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மூலக்கதை