சாலை விபத்தில் 13 பேர் பலி

தினமலர்  தினமலர்
சாலை விபத்தில் 13 பேர் பலிகலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹாட்வில்லே பகுதியில் நடந்த சாலை விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்று டிராக்டருடன் மோதியதில், காரில் பயணித்த, 25 பேரில், 13 பேர் உயிரிழந்தனர்; மற்றவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் இந்த விபத்து நடந்துள்ளது. இறந்த அனைவரும், மெக்சிகோவை சேர்ந்தவர்கள்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வர முயற்சி நடந்துள்ளதா என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை