நால்லா இருக்குமா நாலாவது ‘ரவுண்ட்’ * ஐ.சி.சி., கலக்கல் | மார்ச் 03, 2021

தினமலர்  தினமலர்
நால்லா இருக்குமா நாலாவது ‘ரவுண்ட்’ * ஐ.சி.சி., கலக்கல் | மார்ச் 03, 2021

துபாய்:  இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நாலாவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட போட்டோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. ஜூன் 18ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள பைனலுக்கு, 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து (70%) முன்னேறியது. முதலிடத்தில் உள்ள இந்திய அணி (71.0%), இன்று துவங்கும் நான்காவது டெஸ்டில் குறைந்தபட்சம் ‘டிரா’ செய்தால், பைனலுக்கு செல்லலாம். மாறாக தோற்றால் ஆஸ்திரேலியா (69.2%) பைனலுக்கு செல்லும்.

 இப்போட்டியை குத்துச்சண்டையுடன் ஒப்பிட்டிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,). ‘நான்காவது ரவுண்ட்’ என வர்ணித்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி., ஒரு போட்டோ வெளியிட்டது. 

இதில்,‘குத்துச்சண்டை போட்டியில் மூன்று சுற்று முடிந்து,  இந்திய அணி கேப்டன் கோஹ்லி, அடுத்து துவங்கும் நான்காவது ‘ரவுண்டை’ எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘அடி’ வாங்கி சோர்ந்து உட்கார்ந்துள்ளார். அருகில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் நிற்கிறார். அருகில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் நிற்கிறார்.

இதில் யார் வெற்றி பெறப் போகின்றனர் என்பதை எதிர்பார்த்து, குத்துச்சண்டை மேடைக்கு கீழ், ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்ட நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், டிரன்ட் பவுல்ட், டிம் சவுத்தீ உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர். இதற்கு ‘தற்போது நான்காவது சுற்று (‘ரவுண்டு’) துவங்குகிறது,’ என தெரிவித்துள்ளது. இதற்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

மூலக்கதை